நேற்று கேட்ட பாடல்களில் பிடித்த சில வரிகள் இதோ...
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்?
என் காதலும் என்னாகுமோ...
உன் பாதத்தில் மண்ணாகுமோ...
விட்டு விட்டு என்றாவது எரியும் குழல் விளக்கைப் போல, என்றோ என்னுள்ளே தோன்றும் எண்ணக் கீற்றுகள் இங்கே.
வெள்ளி, 17 டிசம்பர், 2010
பிரிவு
இன்று மகளைப் பள்ளிக்கு
ஸ்கூட்டியில் அழைத்துச் சென்றேன்
பள்ளியில்
அவள் இறங்கிக் கொண்டாள்
மனதில்
பாரம் ஏறிக் கொண்டது.
சனி, 11 டிசம்பர், 2010
காதல்
அன்று...
உன் சுவாசம் தொட்டதாலேயே,
இந்தக் காற்றைக் காதலிக்கிறேன்
உன் பாதம் பட்டதாலேயே,
இந்த மண்ணை காதலிக்கிறேன்
உன்னை ஈன்றதாலேயே,
உன் தாயைக் காதலிக்கிறேன்
உன்னோடு உறவானதாலேயே,
உன் குடும்பத்தையும் காதலிக்கிறேன்
உனக்கு பட்டம் தந்தாலேயே,
இந்தக் கல்லூரியைக் காதலிக்கிறேன்
இன்று...
நீ என் மீது கோபம் கொண்டாய்,
எனக்கு சுவாசிக்க காற்று இல்லை
என்னால் நிலை கொள்ள முடியவில்லை
என் தாயின் அன்பு தேற்றவில்லை
என் பிள்ளைகள் பசி புரியவில்லை
நம் பட்டங்களால் புத்தி தெளியவில்லை
உன் சுவாசம் தொட்டதாலேயே,
இந்தக் காற்றைக் காதலிக்கிறேன்
உன் பாதம் பட்டதாலேயே,
இந்த மண்ணை காதலிக்கிறேன்
உன்னை ஈன்றதாலேயே,
உன் தாயைக் காதலிக்கிறேன்
உன்னோடு உறவானதாலேயே,
உன் குடும்பத்தையும் காதலிக்கிறேன்
உனக்கு பட்டம் தந்தாலேயே,
இந்தக் கல்லூரியைக் காதலிக்கிறேன்
இன்று...
நீ என் மீது கோபம் கொண்டாய்,
எனக்கு சுவாசிக்க காற்று இல்லை
என்னால் நிலை கொள்ள முடியவில்லை
என் தாயின் அன்பு தேற்றவில்லை
என் பிள்ளைகள் பசி புரியவில்லை
நம் பட்டங்களால் புத்தி தெளியவில்லை
புதன், 3 டிசம்பர், 2008
இயற்கையின் செயற் பெயர்கள்
இடி 'இடி'க்கிறது
மின்னல் 'வெட்டு'கிறது
மழை 'கொட்டு'கிறது
சாரல் 'அடி'க்கிறது
அட மனிதா, இவற்றிலுமா வன்முறை?
மின்னல் 'வெட்டு'கிறது
மழை 'கொட்டு'கிறது
சாரல் 'அடி'க்கிறது
அட மனிதா, இவற்றிலுமா வன்முறை?
செவ்வாய், 2 டிசம்பர், 2008
பரப் பார்வை
மீன் வாயைப் பிளக்கிறது
மனிதன் தீனி போடுவான் என்று
மனிதன் வாயைப் பிளக்கிறான்
மீன் நல்ல தீனி என்று.
மனிதன் தீனி போடுவான் என்று
மனிதன் வாயைப் பிளக்கிறான்
மீன் நல்ல தீனி என்று.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)